உலகம்

ஆப்கானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்..!

Malaimurasu Seithigal TV

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 320-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று அடுத்தடுத்து 6 முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 320 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 40 கிலோ மீட்டர் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

ரிக்டரில் 4 புள்ளி 3 மற்றும் 6 புள்ளி 3-க்கு இடைப்பட்ட அளவுகளில் தொடர்ச்சியாக 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளன. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக நிகழ்ந்ததையடுத்து, நகரில் பல பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கியதால்  சுவர்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. 

தொடர்ந்து கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகாரிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.