சிறுமிகள் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்க வற்புறுத்தப்படுகின்றனர். பள்ளிக்கு செல்லாத வகையில் சிறுமிகளை கடத்தி தாக்கி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பாலின சமத்துவம் குறித்து ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களின் நிலை குறித்து பேசிய குட்டரஸ், பாலின சமத்துவத்தை நோக்கிய முன்னேற்றம் நம் கண் முன்னே மறைந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். தற்போதைய மதிப்பீடுகளின்படி பார்த்தால் உலகம் பாலின சமத்துவத்தை அடைய இன்னும் 300 ஆண்டுகள் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.
சிறுமிகள் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள் எனவும் பள்ளிக்கு செல்லாத வகையில் சிறுமிகளை கடத்தி தாக்கி வருகின்றனர் எனவும் கூறிய அவர் பாலின சமத்துவத்தை அடைவதற்கான நம்பிக்கை மேலும் மேலும் தொலைந்து வருகிறது என்பதற்கு இதுவே சான்று எனவும் கூறியுள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: இம்ரான் கானை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்....!!!