தமிழ்நாடு

12 கோடி செலவில் பணிகள்.... 4 மாதங்களில் திறக்கப்படும்!!!

Malaimurasu Seithigal TV

12 கோடி செலவில் அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 4 மாதங்களில் திறக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலுக்கு நான்கு சிறு திருத்தேர்கள் அமைத்து தருவது, அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் அதிமுக உறுப்பினர் ஓ.எஸ் மணியன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேதாரண்யேஸ்வரர் கோயில் போதிய வருமானம் இல்லாத கோயிலாக இருந்தாலும் ஆணையர் நிதி ஒதுக்கீடு செய்து  தேர் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

மேலும், அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டித் தரப்படும் என கடந்த 2022-23 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டதாகவும், அது தொடர்பான வரைபடம் மறு வடிவம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  மேலும் 12 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதோடு, விரைவில் அதற்கான முழுமையான  பணிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிக்கப்பட்டு திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.