மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்ப்பதாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித்தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசாதுதீன் ஓவைசி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்றுப் பேசிய அசாதுதீன் ஓவைசி, அதிகப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை இச்சட்டம் உறுதிப்படுத்துகிறது எனில், ஓபிசி-இஸ்லாமியப் பெண்களுக்கு மட்டும் அதில் அநீதி இழைக்கப்படுவது ஏன் என கேள்வியெழுப்பினார்.
இதன் காரணமாக மசோதாவை தனது கட்சியின் சார்பில் எதிர்ப்பதாகவும் அவர் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
இதையும் படிக்க | மகளிர் இடஒதுக்கீடு மசோதா : மக்களவையில் காரசார விவாதம்..!