தமிழ்நாடு

“பெண்கள் என்றால் அடிமை....” முதலமைச்சர் ஸ்டாலின்!!!

Malaimurasu Seithigal TV

பெண் என்றால் ஆண்களுக்கு அடிமை என்ற ஆண்களின் எண்ணம் மாற வேண்டும் எனவும், இந்த சிந்தனை மாற்றத்தை சமூகத்தில் விதைக்க மகளிர் தின விழாக்கள் பயன்பெறட்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

விருதுகள்:

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் "சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் "உலக மகளிர் தின விழா" நடைபெற்றது.  இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அவ்வையார் விருது, பெண் குழந்தை விருது, சிறந்த மாவட்ட ஆட்சியர்களுக்கான விருது போன்ற விருதுகளையும், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

பெண்கள் என்றால்:

நிகழ்ச்சியில் பேசிய அவர், பெரியாருக்கு, பெரியார் என பட்டத்தை கொடுத்தது பெண்கள் தான் எனக் கூறிய அவர், திமுக அரசு பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.  பெண்கள் முழுமையாக விடுதலை பெற்று விட்டார்கள் என நான் கூற மாட்டேன் எனக் கூறிய முதலமைச்சர் பெண்கள் என்றால் அடிமை என்ற ஆண்களின் எண்ணம் மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பரிசுகள்:

அதனை தொடர்ந்து சென்னை அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற அவர், அங்கு பணியிலிருந்த பெண் காவலர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, திருக்குறள் உள்ளிட்ட புத்தகங்களை பரிசாக வழங்கினார்.