இந்தியாவில் பல பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக எம்.பி.கனிமொழி குற்றச்சாட்டினார்.
சென்னை நந்தனத்தில் நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டையொட்டி மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பங்களை எம்.பி. கனிமொழி பார்வையிட்டார்.
இதையும் படிக்க : ரஜினிக்கு ஒரு நியாயம்...விஜய்க்கு ஒரு நியாயமா? சீமான் கேள்வி!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மணிப்பூரில் நடந்த கலவரங்களில் மிகப்பெரிய அளவில் பெண்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றும், மக்களிடையே விரோதத்தையும், காழ்ப்புணர்ச்சியையும் உருவாக்கும் சூழ்நிலையை பாஜக அரசு உருவாக்கி கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசியவர், சமூகத்தில் பெண் குரல் ஓங்கி ஒலிக்கக்கூடிய இடமாக திமுக மகளிர் உரிமை மாநாடு அமையும் என கூறினார்.