தமிழ்நாடு

பெண்களுக்கு வழங்கப்படுவது வெறும் டெபிட் கார்டு அல்ல; வாழ்க்கையை மாற்றக்கூடிய துருப்புச் சீட்டு!

Tamil Selvi Selvakumar

பெண்களுக்கு வழங்கப்படுவது வெறும்  டெபிட் கார்டு அல்ல,  வாழ்க்கையை மாற்றக்கூடிய துருப்புச் சீட்டு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 500 மகளிருக்கு மாதந்தோறும் ஆறாயிரம் ரூபாய் பெறுவதற்கான ஏடிஎம் கார்டுகள் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் முன்னோடி திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்றும், இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் டெபிட் கார்டு, வெறும் டெபிட் கார்டு அல்ல, இது மகளிரின் வாழ்க்கையை மாற்றும் துருப்பு சீட்டு என்று தெரிவித்தார்.

மேலும் பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறுவது குடும்பத்திற்கும், நாட்டிற்கும் 
முக்கியமானது எனவும், பெண்கள் சுதந்திரமாக செயல்பட பெண்கள் படிக்க வேண்டும், அரசியல் பேச வேண்டும் எனவும் கூறினார்.