தமிழ்நாடு

பிரதமர் மோடியை பார்த்து திமுக பயந்து நடுங்குகிறது.. டிடிவி தினகரன் சரமாரி கேள்வி! 

பாஜக மற்றும் பிரதமர் மோடியை பார்த்து திமுக பயந்து நடுங்குகிறது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

பாஜக மற்றும் பிரதமர் மோடியை பார்த்து திமுக பயந்து நடுங்குகிறது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் ஒமிக்ரான் நோய்த்தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் கூறி வருகிறார். இந்த நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி,தஞ்சாவூர் போன்ற இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களை கூட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஒமிக்ரான் நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்களின் உயிரோடு விளையாடாமல்,அரசியல் நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்றும் இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல் மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் இல்லை என்றால் இது குறித்து நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாலின் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் எதையெல்லாம் செய்தாரோ அதையே தான் தற்போது உள்ள முக ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.மேலும் ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளிய கூடாது.அவரின் மீது போடப்பட்டுள்ள வழக்கை சந்திப்பது தான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு என்றும் அவரை விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் மோடி எங்களுக்கு எதிரியே இல்லை. விருந்தினராக வருபவருக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை என்று திமுக கூறியுள்ளதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. அன்று  இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று  கூறிய  எங்களைப் போன்றவர்களைப் பார்த்து பா.ஜ.க.வைக் கண்டு பயப்படுகிறார்கள்’என்று தி.மு.க.வினர்  விமர்சனம் செய்தார்கள். ஆனால் இன்று மோடியை கண்டு திமுகவினர் பயப்படுகிறார்கள் என்று  கூறினார்.பாஜக மற்றும் பிரதமர் மோடியை பார்த்து திமுக பயந்து நடுங்குகிறது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்றும் விடியல் அரசின் சாயங்கள் தற்போது தான் ஒவ்வொன்றாக வெளுத்து வருகிறது என்றும் திமுகவை டிடிவி கேள்விகளால் வாட்டி எடுத்துள்ளார்.