தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கடந்த இரு நாட்களாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய்ப்பட்டது. அதில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கூறப்பட்டிருந்தன. நிதிநிலை அறிக்கை குறித்து பல விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
நிதிநிலை அறிக்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக தனது போலி தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சற்றும் கவலையில்லாமல், விவசாயி நலன் குறித்து எண்ணாமல், இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெற்று அறிவிப்புகள் கொடுத்து ஏமாற்றி இருக்கிறது எனவும் விவசாயிகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு திறனற்ற திமுக அரசு பதில் அளிக்குமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு... ஹால் டிக்கெட் பதிவிறக்கம்!!