தமிழ்நாடு

அனைத்து பகுதிகளிலும் அரசு கல்லூரி அமைக்கப்படுமா?!

Malaimurasu Seithigal TV

அரசு கல்லூரி இல்லாத பகுதிகளில் விரைவில் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.  அதனை தொடர்ந்து ஆளுநர் மீதான உரையின் காரணமாக சட்டமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி  வைக்கப்பட்டது.

அதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  தொடர்ந்து சட்டப்பேரவையில் அமைச்சர்கள் திட்டங்கள் அதன் மீதான விவாதங்கள் கேள்விக்கு பதில்கள் போன்றவை நடைபெற்று வருகின்றன.
  
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய வினாக்கள் விடைகள் நேரத்தில், கிராமப்புற பகுதிகளிலும் அரசு கலைக் கல்லூரிகள் அமைக்கப்படுமா என கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினர்.  

இதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு கல்லூரிகள் இல்லாத 26 இடங்களில், கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது எனவும் அத்துடன், சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி  குறிப்பிட்ட பகுதியையும் சேர்த்து, பரிசீலித்து, விரைவில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.