தமிழ்நாடு

”பன்னீர் செல்வத்துடன் ஏன் சமாதானம் குறித்து பேச வேண்டும் ?” கேள்வியெழுப்பிய ஜெயக்குமார்!!!

Malaimurasu Seithigal TV

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 

பங்கேற்றோர்:

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி சி வி சண்முகம் சி..விஜயபாஸ்கர் கேபி அன்பழகன் வேலுமணி தங்கமணி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், சுமார் 1.30  மணி நேரம் ஆலோசனையானது நடைபெற்றது 

செய்தியாளர் சந்திப்பு:

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;

நாளை சட்டமன்ற தொடரில் பங்கேற்பது குறித்து இன்று பேசவில்லை என்றும்  நாளை 51 ஆம் ஆண்டு துவக்க விழா நாளை தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது எனவும் மத்திய அமைச்சர்கள் மாநில அரசின் திட்டங்களை ஆய்வு செய்வது மாநில அரசின் உரிமைகளை பறிக்காத வகையில் அமைய வேண்டும் என்று கூறினார்.

மேலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்வது விமர்சிக்கப்பட வேண்டியதில்லை என்றும் பேசினார். 

மாண்புடன்...:

மேலும் தொடர்ந்து பேசிய அவர் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவை தலைவர் மாண்போடு நடந்து கொள்வார் என நம்புகிறோம் என்று கூறினார்

கூட்டணி:

டி.டி.வி தினகரன் பிஜேயியுடன் கூட்டணிக்கு தயார் என்று தெரிவித்துள்ள நிலையில் அதிமுக இதனை ஏற்று பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்கிற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் தேர்தல் நேரத்தில் அதுகுறித்து முடிவெடுப்போம் என தெரிவித்தார். 

Pro திமுக:

பன்னீர் செல்வத்துடன் ஏன் சமாதானம் குறித்து பேச வேண்டும் ? ? இன்று ஆலோசனையில் அதுகுறித்து எதுவும் பேசவில்லை ! ஓ.பி.எஸ் Pro திமுகவாக செயல்படுகிறார். அதை பல இடங்களில் பார்த்துவிட்டோம். நாங்கள் எல்லா விஷயத்திலும் திமுகவை எதிர்த்து  செயல்படுகிறோம். அப்படி ஏன் ஓ.பி.எஸ் தரப்பு செய்யவில்லை!? கருணாநிதி என்று தான் ஜெயலலிதா பேசுவார்., ஆனால் ஓ.பி.எஸ் அப்படி இல்லை திமுக மீது ஓ.பி.எஸ்க்கு அவ்வளவு பாசம் என்று பேசினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.