தமிழ்நாடு

தேர்தல் நேரத்தில் மட்டும் விஜயலட்சுமி விவகாரம் வெளிவருவது ஏன்? - சீமான்

Tamil Selvi Selvakumar

ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியமற்ற தேவையற்ற திட்டம்  என நாம் தமிழர் கட்சியின் தலைலமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் கடுமையாக சாடியிருக்கிறார். 

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறும் பாஜக, காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் பக்கம் நிற்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர். ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியமற்றது என்றும், தேவையற்ற திட்டம் என்றும் கடுமையாக சாடிய அவர், குரங்கு கையில் பூ மாலை கிடைத்தது போல் பாஜக ஆட்சி செய்து வருவதாக விமர்சித்தார்.

திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்ட பாஜக, அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய சீமான், ஊழலைப் பற்றி  பேசுவதற்கு பாஜகவுக்கு தகுதியில்லை என்றும் ஆவேசத்துடன் பேசினார். மாற்று  கட்சிகளின் எம்எல்ஏக்களை 130  கோடி கொடுத்து  விலைக்கு வாங்க பாஜகவுக்கு பணம் எங்கிருந்து வந்தது எனவும் சீமான் வினவினார். 

நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்த கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் மட்டும் இந்த குற்றச்சாட்டு பேசப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய சீமான், முடிந்தால் கைது செய்து பாருங்கள் என்று சவால் விட்டார்.