தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில், சில முக்கிய அறிவிப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தும் அம்சங்களும் இடம்பெற வாய்ப்புள்ளது.
நீட் தேர்வு:
தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் விருந்தினர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, தமிழகத்தில் ‘நீட்' தேர்வு நுழைய யார் காரணம் என்பது குறித்து காரசார விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க. - அ.தி.மு.க. மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டனர்.
முதலமைச்சர் பதில்:
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்குள் 'நீட்' தேர்வை நுழையவிடாமல் தடுத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எனவும், ஜெயலலிதா இருந்தது வரை 'நீட்' தேர்வு வரவில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும், யார் ஆட்சியில் நுழைந்தது எனக் கேட்ட முதலமைச்சர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் 'நீட்' தேர்வு நுழைந்தது என குற்றம்சாட்டினார்.
இபிஎஸ் பதில்:
இதற்கு பதலளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 'நீட்' தேர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது, தி.மு.க.வை சேர்ந்தவர்தான் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார் என கூறினார்.
அதிமுகவினர் அமளி:
தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சாலிகிராமம் பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு திமுகவினர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டினார்.
வெளிநடப்பு:
அதிமுக ஆட்சியில் நடந்த சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பேரவையில் முதலமைச்சர் பதிலளித்து வந்த நிலையில், முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழவுள்ள அதிசயம்....