நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே ராஜன் குழு சமர்பித்த ஆய்வறிக்கையில்,
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு தொடங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தனி சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் அனுமதியை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டே மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வினை நடத்தலாம் என்றும்,
நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டம் இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
165 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் உலக நாடுகளில் பின்பற்றப்படும் மருத்துவப்படிப்புகளுக்கான நடைமுறையும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் தமிழ்நாடு பின்தங்கி விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.