தமிழ்நாடு

ராகுல்காந்தியே இல்லை...நாங்களும் எம்பி பதவியை ராஜினாமா செய்வோம் - திருநாவுக்கரசா்!

Tamil Selvi Selvakumar

ராகுல்காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து விட்ட காரணத்தால் தாங்களும் எம்பி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக திருநாவுக்கரசா் எம்பி தொிவித்துள்ளாா். 

மோடி குறித்து கருத்து தெரிவித்ததற்காக, ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் குஜராத் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து  தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸார் சத்தியாகிரக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் சாா்பில், அறவழி போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருநாவுக்கரசா் எம்பி மேடையில் பேசினார், அப்போது, பொது மேடையில் பேசியதற்கு மான நஷ்ட வழக்கு தொடுத்து தண்டனை கொடுத்தால் யாரும் பொது மேடையில் பேச முடியாது என குறிப்பிட்ட அவா், தாங்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தொிவித்துள்ளாா். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற பொதுக்கூட்டத்தில் சாதாரணமாக பேசியதை, திட்டமிட்டு பேசியதாக கூறி இது போன்ற அவதூறு வழக்கை பதிவு செய்து பதவியை பறித்துள்ளதாக திருநாவுக்கரசு எம்.பி. குற்றம் சாட்டினார்.