தமிழ்நாடு

"ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" - ஜவாஹிருல்லா தகவல்

Malaimurasu Seithigal TV

இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய கோரி வருகின்ற 30-ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

ஈரோட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  பொதுமக்கள் வசதிக்காக 198-வது இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்க விழா நடைபெற்றது.

இதில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித் ஜவாஹிருல்லா:- 

25 வருடங்களுக்கு மேல் சிறைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்து ஆளுநருக்கு அனுப்பிய ஆவணத்தில் கையெழுத்து போடாமல் காலதாமதம் செய்து வரும் நடவடிக்கை கண்டித்து,. வரும் 30-ம் தேதி மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆளுநர் மாளிகையை  முற்றுகை போராட்டம் செய்ய போவதாக கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அதிமுக ஆட்சி காலத்தில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காமல் தற்போது விடுதலை செய்யுமாறு கூறி நாடகம் போடுவதாக குற்றஞ்சாட்டினார்.

ஆளுநர் கையெழுத்து போட மறுத்தால் நீதிமன்றம் மூலம் பேரறிவாளன் விடுதலை மேற்கோள் காட்டி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்வதாக ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி தனது வலுவை இழந்து வருவதால் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் இதே போன்று திமுக தலைமையிலான கூட்டணி தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.