திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியிலிருந்து சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
மேலும், அமராவதி அணை திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது .
இந்நிலையில் இன்று முதல் 9 நாட்களுக்கு அமராவதி ஆற்றின் மூலம் பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும், அமராவதி பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறும் 25 ஆயிரத்து 650 ஏக்கர் புதிய பாசன பகுதிகளுக்கு ஆயிரத்து 643 மி கனஅடி தண்ணீரை பொதுப்பணித் துறை மூலம் திறந்து விடப்பட்டது.