வ.உ.சி. ஒரு அமைப்புக்கான சொந்தம் அல்ல, இந்தியாவில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமானது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152வது ஜெயந்தி விழாவான இன்று திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உசிதம்பரம் பிள்ளையின் முழு திருவுருவ சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளரை சந்தித்து பேசும்போது...
”வ.உ.சி. ஒரு அமைப்பிற்கு சொந்தமானவர் அல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிற்கே சொந்தமானவர் ”, என்று கூறினார்.
தொடர்ந்து பேசுகையில், “ பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டு முதல்வரிடம் எனக்கு வந்த உத்தரவில் வ.உ.சி. குறித்து அரிய பல தகவல்களை புத்தகமாக வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார் அந்தப் புத்தகத்தையும் பள்ளிக் கல்வித் துறை சார்பாக வெளியிட்டு இருக்கிறோம்” .
” 1968-ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டில் 10 சிலைகள் வைக்கப்பட்டது. அதில் முக்கியமான சிலை வ.உ.சி சிலை”, என்றும் தெரிவித்தார்.அவர் வாழ்ந்த வீட்டிற்கு சென்றேன். அவர் வீட்டின் மேல் பகுதியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்த்தேன்.
அவரின் பிறந்த நாள் அன்று ’வேற்றுமையில் ஒற்றுமை’ கூறும் நாடாக நாம் இருக்க வேண்டும்”, என்றார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | பிக் ஃபாதர் கருணாநிதியாலேயே முடியவில்லை...ஸ்மால் பாய் உதயநிதியால் என்ன செய்ய முடியும்!