தமிழ்நாடு

ஈழத்தமிழர்களிடம் சீமான் பணமோசடி - வீரலட்சுமி குற்றச்சாட்டு

Malaimurasu Seithigal TV

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈழத்தமிழர்களை ஏமாற்றி பணம் பறித்ததாக தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி உள்துறை செயலாளரை சந்தித்து சீமான் குறித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரலட்சுமி கூறியதாவது:- 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளிக்க உள்துறை செயலாளரை சந்தித்து மனு அளித்துள்ளேன்.   2011-ல் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த உறுதி மொழி பத்திரத்தில் வழக்கு பதிவுகளை மறைத்து பதிவு செய்துள்ளார்.

ஈழ தமிழர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தோடு சீமான் மற்றும் நாம் தமிழர் நிர்வாகிகள் செயல்படுகின்றனர்.  குடியுரிமை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்கிறார்கள்.

சீமான் ஈழத் தமிழர்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பிற்காக பணம் பறித்து கட்சி நடத்துகிறார்.  இதற்காக ஒரு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.”, என கூறியுள்ளார்.

சீமான் அரசாங்கம் நடத்துகிறாரா? முதலமைச்சரா? அமைச்சரா? என கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கும் சீமானுக்கும் தனிப்பட்ட ரீதியாக எந்த பிரச்சனையும் கிடையாது எனவும் டெரிவித்துள்ளார்.