தமிழ்நாடு

காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி குழுமம்; 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை...!

Tamil Selvi Selvakumar

காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ் கலாமந்திர் குழுமத்தில் உள்ள 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமம் காஞ்சிபுரம் ”வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ் மற்றும் கே.எல்.எம். ஃபேஷன் மால்” என்ற பிராண்ட் பெயர்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பகுதியில் பெண்களுக்கு பிரத்தியேக புடவை விற்பனை செய்து வருகிறது. 

இந்த நிலையில், வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ் கலாமந்திர் குழுமத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதியில் உள்ள 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள வரமஹாலக்ஷ்மி பட்டு சேலை கடைகளில் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகப்படியான லாபத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததன் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.