தமிழ்நாடு

"பீகார் சென்றுள்ள முதலமைச்சருக்கு, #GOBACKSTALIN என அம்மாநில மக்கள் எதிர்ப்பு": வானதி சீனிவாசன் பேச்சு!

Malaimurasu Seithigal TV

பாஜக வின் 9 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பங்கேற்ற வானதி சீனிவாசன், முதலமைச்சர் ஸ்டாலின் பீகார் சென்றது குறித்தும், அமைச்சர் உதயநிதி குறித்தும் பேசியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பாஜகவின் 9 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போது, மல்யுத்த வீராங்கனைகள்  விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவையடுத்து விசாரணை நடைபெறுகிறது என மல்யுத்தக வீராங்கனைகள் விவகாரம் குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார். 

சமீபத்தில், அமைச்சர் உதயநிதி, மோடி, ஈடி யாராலும் திமுகவை அழிக்க முடியாது என பேசியது, குறித்த கேள்விக்கு, திமுகவை திமுகவினரே அழித்து விடுவர் என தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநரை திரும்ப பெற மதிமுக எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் அரசியலமைப்பு சட்டப்படி யாராலும் மாற்ற முடியாது எனவும் பேசியுள்ளார். 

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்திற்கு சாபக்கேடு என திருமாவளவனின் கருத்துக்கு பதிலளித்த அவர், அரசியலுக்கு யார் வேண்டுமாலும் வரலாம், ஆனால்,அவர்கள் மக்களை நேசிப்பவராகவும், பணி செய்பவர்களாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், தமிழக முதல்வர் பீகாருக்கு சென்றிருப்பது குறித்த கேள்விக்கு, தமிழக முதலமைச்சர் பீகாருக்கு சென்றாலும், அங்கு அம்மாநில மக்கள் GO BACK STALIN என எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.