மத்திய அரசு மாநில மொழிகளுக்கு குறைவான நிதி ஒதுக்கிவிட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெறும் 24 ஆயிரம் பேர் மட்டுமே பேசும் ஒரு மொழியை 135 கோடி மக்களின் நாக்குகளில் திணிக்க முயற்சிப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்பிக்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசு உடனே இந்தப் பிரச்சனையில் தலையிட வேண்டும் என்றும் தமிழ்மொழி கற்பிக்காத பள்ளிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என அறிவிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.