சேலம் மாவட்டம் மேட்டூரில் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு சியுடிசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட நாங்கள அம்ச கோரிக்கைளை முன்வைத்தனர்.
அந்த ஆர்பாட்டத்தில், அவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகப் பணிமனையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மற்றும் 8 மணி நேரப்பணி என்ற நிலையை மாற்றி தொழிற்சாலை சட்டத்திற்கு எதிராக 12 மணிநேர பணி செய்ய நிர்பந்தப்படுத்துவதை நிறுத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும், எனவும் கோரினர்.
இதையும் படிக்க | தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தினர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக நோட்டீஸ்....!
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் நடத்துனரிடம் வசூல் அதிகளவில் செய்ய வலியுறுத்தியும் குறைவாக வசூல் கொடுக்கும் நடத்துனர்களை அடிக்கும் நிலையும் நீடித்து வருகிறது எனத் தெரிவித்தனர். மேலும்,தொழிலாளர்களின் தன்மான உணர்வை தூண்டும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | ஆளுநர்களின் அதிகார வரம்பு மீறலுக்கு எதிரான நமது போராட்டத்திலும் வெற்றிபெறுவோம் தீ பரவட்டும் - கேரளா....