தமிழ்நாடு

வாடகை தாய் விவகாரம்...நயன்தாராவிடம் விசாரணையா?

சென்னையில் செய்தியாளர்களை மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார்.

Malaimurasu Seithigal TV

வாடகை தாய் முறையில் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி குழந்தைகள் பெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். அப்போது, சித்த பல்கலைகழக மசோதாவிற்கு விரைவில் ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் வழங்குவார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து இந்திய மருத்துவ சட்டப்படி வாடகை தாய் முறையை பயன்படுத்த திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்றும், இதனால் நயன்தாரா சட்டவிதிகளை மீறினாரா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர்,  நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி சட்ட விதிகளை மீறினாரா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.