தமிழ்நாடு

ஆழ்கடலில் மூழ்கியவர்களின் சடலத்தை கண்டுபுடிக்க, அண்டர் வாட்டர் ட்ரோன்!!

Malaimurasu Seithigal TV

சென்னை அடுத்த காசிமேடு துறைமுகத்தில் எம்ஜிஆர் பல்கலைக் கழகம் கண்டுபிடித்த நீருக்கு அடியில் இயங்கும் டிரோன் இயக்கி பரிசோதிக்கப்பட்டது. 

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் அட்வான்ஸ் இன்ஸ்டிடியூட் சார்பில், ஆழ்கடலில் இறந்தவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கும், போதை பொருள்கள் கண்டுபிடிப்பதற்கும் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர், இதனை, அண்டர் வாட்டர் ட்ரோன் எனவும் அலைகின்றனர்.

இதன் முதற்கட்ட சோதனை ஓட்டத்தை, கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டினம் பக்கம் கடற்கரை பகுதியில் மேற்கொண்டுள்ளனர்.

இதன் இரண்டாம் கட்ட சோதனையை, வடசென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில்  கடலோர காவல் படை மற்றும் தமிழக கடலோர காவல் படை உதவியுடன், ரோந்து கப்பல் மூலம் ஆழ்கடலுக்குள் சென்று மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது மனித உருவ பொம்மையை பயன்படுத்தி, சோதனை மேற்கொண்டுள்ளனர்.

படகுகளில் செல்வோருக்கு விபத்து ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், இந்த அண்டர் வாட்டர் ட்ரோன் மூலம், இறந்தவர்களின் சடலத்தை தேடிக்கண்டுபுடிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கருவியை தரையில் இருந்தபடி சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவு வரை இதை கையாள முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.