தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கில் இருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை எலன்மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். ட்விட்டர் இணையதளத்தில் பணியில் இருந்தவர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது, கட்டாயம் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும், ட்விட்டர் இலச்சினையை (Logo) குருவியிலிருந்து நாய் குட்டியாக மாற்றியது, மீண்டும் நாயை அகற்றி பழைய இலச்சினையான குருவியை மாற்றியது உள்ளிட்ட பலவேறு அதிரடி முடிவுகளை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிக்க : வி பி சிங்க்கு சிலை...! திருமாவளவன் வரவேற்பு...!!
இதற்கிடையில், ட்விட்டர் தளத்தில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் போன்றோருக்கு மட்டும் இது அதிகாரப்பூர்வ, உறுதிசெய்யப்பட்ட கணக்கு என்பதை குறிக்கும் வகையில் ப்ளூ டிக் குறியீடு பயன்பட்டு வந்தது. ஆனால், எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு, கட்டண முறையில் யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என்ற அம்சத்தை கொண்டு வந்தார். இதனால் ட்விட்டர் சந்தா செலுத்தாதவர்களின் ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்கில் இருந்து வந்த ப்ளூ டிக் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.