திருச்சி | தீவிரவாதத் தடுப்புக்கு பல வகையான ஒத்திகைகள் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. தீவிரவாத தாக்குதல்களில் இருந்து பொது மக்களைக் காப்பாற்றி, அந்த தீவிரவாதியை எப்படி சுட்டுக் கொல்வது என்பது குறித்து தேசிய பாதுகாப்பு படை வீரர் பல்வேறு மாநிலங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
அதிகமாக மக்கள் நடமாடும் இடங்களான கோவில்கள், சுற்றுலா தளங்கள், தொழிற்சாலை போன்ற இடங்களில் தீவிரவாதிகள் உள்புகுந்து, பொது மக்களை பினை கைதிகளாக வைத்து தாக்குதல் நடத்த பல வாய்ப்புகள் உள்ளதால், அங்கு உடனடியாக தேசிய பாதுகாப்பு படையும், ராணுவமும் இறங்குவது கடினம். குறிப்பாக, தகவல் அறிந்து முதலில் களமிறங்குவது மாவட்ட மற்றும் மாநில காவல் துறை தான்.
மேலும் படிக்க | அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நடத்திய அதிகாரிகள்...
அதனால், ராணுவம் மற்றும் கமாண்டோ போலீசார் வரும் வரை காத்திருக்காமல் போலீசார் களமிறங்கி, தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று மக்களை பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் இறங்குவர். இதற்காக தேசிய பாதுகாப்புப் படையினரால் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அவ்வகையில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் முதல் முறையாக தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
200க்கும் மேற்பட்ட தேசிய படை வீரர்கள் பங்கு பெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்களை போன்று அதிகாரிகள் கோவிலுக்கு உள்ளே சென்று, பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை தேசிய பாதுகாப்பு படையினர் ரப்பர் குண்டு மூலம் சுட்டு வீழ்த்துவது போன்று ஒத்திகை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க | இந்தியாவிலேயே முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல்... காரணம் என்ன?!!
இந்த தீவிரவாத தடுப்பு ஊத்தியை குறித்து மாநகர காவல் ஆணையர் சக்தி பிரியா கமெண்டோ படைவீரிடம் கேட்டறிந்தார். அவரிடம் இந்த ஆபரேஷன் குறித்தும் தீவிரவாத கும்பல் உள்ளே புகுந்தால் எப்படி சுட்டு வீழ்த்துவோம் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நள்ளிரவு ஒரு மணிக்கு நடைபெற்றது. பாதுகாப்பு நலன் கருதியும் ஒத்திகை செய்வதை யாரும் மொபைலில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்காத வண்ணம் கோயில் சுற்றியுள்ள பகுதியில் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மக்களைக் கவர்ந்த வான்வழி சாகசங்கள்......