தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் விடுமுறை தினம் மற்றும் வார விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவது வழக்கம். அதே போல, தற்பொழுதும் விடுமுறை காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இதையும் படிக்க | சீர்காழியில் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு...!
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் காலை முதலே குவியத் தொடங்கி உள்ளனர். அவ்வாறு குவியம் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் உள்ள தொங்கு பாலம் மற்றும் படகு சவாரி மூலம் இயற்கையாக கொட்டும் அருவிகளை ரசித்து மகிழ்ந்தனர்.
மேலும் வெயிலுக்கு இதமாக ஆயில் மசாஜ் செய்து சீனிய அருவி மெயின் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்தும் மகிழ்கின்றனர். பின்னர் அங்கு சமையல் கலைஞர்கள் மூலம் செய்யப்படும் மீன் சமையலையும் ருசித்து மகிழ்ந்தனர்.
இதையும் படிக்க | ரொம்ப கோவக்கார குரங்கா இருக்கும் போலையே!!!!