கள்ளச்சந்தையில் நடைபெற்ற மது விற்பனையால் தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுளில் 2 லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.
அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் கிராமத்தில் பெரம்பலூர் பாமக மாவட்ட செயலாளர் உலக. சாமிதுரை இல்ல திறப்பு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்தனர். ஆனால், அது குறைவாக விற்பனையாகும் கடையா? அல்லது அதிகமாக விற்பனையாகும் கடையா? என்பது தெரியவில்லை. எனவே, இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்க : ”யார் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை விட, யார் வந்து விடக்கூடாது என்பதில் கவனம் தேவை” கனிமொழி பேச்சு!
தமிழகத்தை பொறுத்தவரை மது விற்பனை நடைபெறவில்லை, மது திணிப்பு நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பதே பாமகவின் நிலைப்பாடாகும் எனவும், கள்ளச்சந்தையில் நடைபெற்ற மது விற்பனையால் தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுளில் 2 லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொிவித்தாா்.
தொடா்ந்து பேசிய அவா், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டாா்.