நேற்று 130 முதல் 150ரூ வரை தக்காளி விற்கப்பட்ட நிலையில், தற்போது மேலும், 10 முதல் 30ரூ வரை விலை உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று 130 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 160 ரூபாய்க்கு விற்பனையாவதால், இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து, சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று கோயம்பேடு சந்தைக்கு 400 டன் தக்காளி மட்டுமே வந்த நிலையில், இன்று 100 டன் குறைவாக உள்ளது. 300 டன் தக்காளி கூட இல்லாததால், தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க || "முதலமைச்சர் ராமேஸ்வரத்தில் நீராடி பாவத்தை கழுவிக்கொள்ள வேண்டும்" அண்ணாமலை காட்டம்!!