தமிழ்நாடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Malaimurasu Seithigal TV

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து  29-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 25ம் தேதி கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும்  26 முதல் 30ம் தேதி  வரை தமிழ்நாடு மற்றும்  புதுவையில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.