தமிழ்நாடு

அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...! - சென்னை வானிலை ஆய்வு மையம்.

Malaimurasu Seithigal TV

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை:

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்ககூடும் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

இன்று (01.08.203) காலை 0530 மணி அளவில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது. இது 0830 மணி அளவில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை வங்காளதேசம் கடற்கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ட்தெரிவித்துள்ளது. 

 அதோடு, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  இன்று ( ஆகஸ்ட் 1  ) மற்றும்  நாளை (ஆகஸ்ட் 2)  தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும்   வருகிற 03.08.2023 முதல் 07.08.2023 வரை : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை : 

மேலும், ஆகஸ்ட் 1  மற்றும் 2  தேதிகளில்   தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்;  ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும். 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். 

இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.