தமிழ்நாடு

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

Tamil Selvi Selvakumar

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 270 விசைப்படகுகள் மூலம் வழக்கமாக செல்லக்கூடிய மீனவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 

இதில் ஏற்கனவே, பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தவிர, தற்போது  இயங்கக்கூடிய 240 விசைப்படகுகளும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.