நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளியின் முன் இருந்த திருவள்ளுவர் சிலையை ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் இடித்து உடைக்க முயன்றததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த கண்டிபுதூரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளியின் முன் திருவள்ளுவர் சிலையையும் சரஸ்வதி சிலையையும் அமைத்துள்ளார்கள். அப்போது கல்வி நிலையத்தில் ஒரு மதத்தின் கடவுள் சிலையை அமைக்கப் பட்டதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்து அந்த இடத்துக்கு வந்த ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் பள்ளியின் முன் சரஸ்வதி சிலை இருக்க கூடாது என்றால் திருவள்ளுவர் சிலையும் இருக்கக்கூடாது என்று திருவள்ளுவர் சிலையை கல்லால் அடித்து உடைக்க முயன்றுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு இருந்த திருவள்ளுவர் சிலையும், சரஸ்வதி சிலையும் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.