பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூன் மாதம் முதல் சிறையில் உள்ள அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார் சிவசங்கர் பாபா. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளது.
யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வழக்கை திசை திருப்புதல் மற்றும் சாட்சியங்களை அளிக்கும் முயற்சியில் சிவசங்கர் பாபாவோ அல்லது அவரின் ஆதரவாளர்களோ ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம்,
கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளிக்கு சிவசங்கர் பாபா செல்லக்கூடாது எனவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்துள்ள உச்சநீதிமன்றம், சாட்சியங்களை கலைக்க முயன்றால் ஜாமீன் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.