தமிழ்நாடு

சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது...!!

Malaimurasu Seithigal TV

ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி திருப்பி அனுப்பியது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.  அடுத்த உயர் பலிகள் நடக்கும் முன்பு ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என பாமக செய்தி தொடர்பாளர் பாலு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்து அவர் விளக்கம் கேட்டு தற்போது அனுப்பி வைத்துள்ளது கண்டிக்கத்தக்க ஒன்று எனவும், மசோதா அனுப்பி வைத்த 142 நாள் பிறகு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார் பாலு.  

தொடர்ந்து பேசிய அவர், இந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகு 17 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னால் உடனடியாக அவர் திருப்பி அனுப்பி வைத்திருக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் தொடர் தற்கொலைகள் நடந்து கொண்டிருப்பதை கண்டுகொள்ளாமல் இந்த முடிவை எடுத்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மீண்டும் ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி மாநில அரசு ஆளுநருக்கு திருப்பி அனுப்பும்போது பழைய மசோதாவை திருத்தம் செய்தோ திருத்தம் செய்யாமலோ புதிய சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அரசியலமைப்புச் சட்டம் 200 படி ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். 

அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டி கூட்டத்தொடரில் ஆன்லைன் தடை சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் காலம் கடந்து அவர் எடுத்துள்ள முடிவு கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.  மேலும், ஆளுநர் ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவை காலம் தாழ்த்தி திருப்பி அனுப்பியது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது எனவும் மேலும், அடுத்த உயிர் பலிகள் நடக்கும் முன்பு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.