தமிழ்நாடு

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவியை நீக்கி...இயக்குனர் பதவியை ஏற்படுத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்!

Tamil Selvi Selvakumar

பள்ளிக் கல்வித் துறையில் ஆணையர் பதவியை  நீக்கி விட்டு, மீண்டும் இயக்குனர் பதவியை ஏற்படுத்த வேண்டும்  என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

பள்ளிக்கல்வித் துறையில் மீண்டும் இயக்குனர் பதவியை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், பள்ளிக் கல்வி ஆணையர் பொறுப்பிலிருந்து நந்தகுமார் ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்ட நிலையில், இதுவரை வேறு யாரும் அந்த பதவியில் பணியமர்த்தப்படவில்லை என தெரிவித்துள்ளார். 

மேலும், பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற குழப்பங்களுக்கு, ஆணையரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டதும் ஒரு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். ஆகவே, இனியும் குழப்பங்கள் நிகழாமல் இருக்க பள்ளிக்கல்வி ஆணையர் பதவியை நீக்கி விட்டு, பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.