தமிழ்நாடு

அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்த புதிய திட்டம்... கல்லூரிகள் மூடப்படுகிறதா?!!!

Malaimurasu Seithigal TV

நன்றாக செயல்பட்டு வரும் 150 கல்லூரிகளுக்கு நேரடியாக ஆய்வு செய்யாமல்  அனுமதி அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு.

புதிய திட்டம்:

வரும் கல்வியாண்டில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும்,உள் கட்டமைப்பு,பேராசியர் எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற பொறியியல்  கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை அதிகாரப்பூர்வமாக வேறு கல்லூரிகளில் சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

நிரம்பாத இடங்கள்:

கடந்தாண்டு நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் 9 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை எனவும் 88 கல்லூரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர்களும் 177 கல்லூரிகளில் 50 சதவீதம் மாணவர்களுமே  சேர்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய நிலையில் பொறியியல் படிப்பின் தரத்தை மேம்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

நேரில் ஆய்வு:

மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும்  நேரில் சென்று ஆய்வு செய்யவும், பேராசிரியர் எண்ணிக்கை உள்கட்டமைப்பு வசதிகள்  சரியில்லாத கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு இல்லை:

2023-2024ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் நன்றாக செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க நேரில் சென்று ஆய்வு செய்யப் போவதில்லை என அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிமுறை:

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் வழங்க புதிய வழிமுறையை அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.