தமிழ்நாடு

பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் விலகிய மர்மம்.....தடவியல் துறை கூறியதென்ன?!!

Malaimurasu Seithigal TV

சென்னை நுங்கம்பாக்கம் ஹடோஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வசித்து வந்தார்.  வேலூரை பூர்விகமாக கொண்ட வாணி ஜெயராமின் கணவர் ஜெயராம், கடந்த 2018-ம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானதை அடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில்  தனியாக வசித்து வந்தார்.

மரணத்தில் மரணம்:

இந்நிலையில், மாடியில் இருந்து படிக்கட்டில் கீழே இறங்கியபோது தவறி விழுந்து வாணி ஜெயராம் உயிரிழந்தார்.  அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 'சந்தேக மரணம்' பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடற்கூறு ஆய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பாடகி வாணி ஜெயராமின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

அறிக்கை:

வாணி ஜெயராம் மரணம் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை தகவலின் படி, விழுந்ததில் தலையில் அடிபட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது.  மேலும் வாணி ஜெயராமின் படுக்கைக்கு அருகில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேசை மீது விழுந்து தலையில் பலமாக அடிபட்டதில்தான் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

நெற்றியில் உள்ள காயம் மற்றும் மேசையின் விளிம்பில் உள்ள ரத்த கறைகளை வைத்து தடயவியல் நிபுணர் சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

விலகிய மர்மம்:

வாணி ஜெயராம் வீட்டிற்கு வெளியில் இருந்து எந்த நபர்களும் வரவில்லை என்பது சிசிடிவியை ஆய்வு செய்ததில் தெரிய வந்திருப்பதாகவும் தடயவியல் துறை அறிக்கை சார்பிலும் பிரேத பரிசோதனை ஆய்வு அடிப்படையிலும் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.