போலி திராவிடம் செய்யும் இந்த மாயாஜால வித்தைகள் வெகு நாளைக்கு, மக்கள் மத்தியில் நீடிக்காது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, கால்நடைத் துறை இணை அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மீது போலி திராவிட மாடல் அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மீது போலி திராவிட மாடல் அரசு, மேற்கொண்டு வரும் பழி வாங்கும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைத்த எங்கள் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களுக்கு நன்றி.
தமிழகத்தில் மத்திய பாஜக தலைமைக்கு நான்கு பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணை செய்து, தனது அறிக்கையை மத்திய தலைமைக்கு வழங்க உள்ளது.
போலி திராவிடம் செய்யும் இந்த மாயாஜால வித்தைகள் வெகு நாளைக்கு, மக்கள் மத்தியில் நீடிக்காது”, எனப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்க | "கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால் முதலமைச்சர் அச்சத்தில் உள்ளார்" எடப்பாடி பழனிச்சாமி!