மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் - 48 திட்டத்தின் 1லட்சத்து 50 ஆயிரமாவது பயனாளியுடன் கலந்துரையாடல் நிகழ்வு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் பயனாளியுடன் கலந்துரையாடி நலம் விசாரித்தார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார் அடிக்கடி விபத்து ஏற்படும் 500 இடங்கள் கண்டறியப்பட்டது .1083 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டது
மேலும் படிக்க | கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கினார் அமைச்சர் நாசர்!
தமிழகத்தில் ஆண்டுதோறும் 16 ஆயிரம் பேர் இறந்து விடுகின்றனர்.இந்த திட்டம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. 50 ஆயிரமாவது பயனாளியை போரூரிலும், 1 லட்சமாவது பயனாளியை சவீதா மருத்துவமனையிலும்.இன்று 1.50 லட்சம் பயனாளியை இங்கு பார்த்து உள்ளோம்
தமிழகத்தில் 1,50107 பேர் விபத்தில் சிக்கி உள்ளனர் அவர்கள் காக்கப்பட்டு உள்ளனர்.இதில் மாநில பாகுபாடு இல்லை எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லைஇதுவரை இந்த திட்டத்திற்கு ரூ.132 கோடியே 52 லட்சம் செலவு செய்துள்ளோம் இந்த திட்டத்தால்
1.50 லட்சம் உயிர் பாதுகாக்கப்பட்டு உள்ளது.
ஆம்புலன்ஸ்
சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது1351 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்படுகிறது இந்தியாவில் சாலை விபத்து 1.50 லட்சம் நடக்கிறது தமிழகத்தில் மட்டும்
16 ஆயிரம் விபத்துக்களாக உள்ளது இந்த ஆண்டு
1.3 சதவீதம் இறப்பு குறைந்துள்ளது. ஒன்றிய அரசின் அதிகாரிகள் நமது திட்டத்தை கேட்டு வருகின்றனர்.இந்தியா முழுவதும் காய்ச்சல் பரவி உள்ளது. நாம் ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தினோம்.தமிழகத்தில் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்கள் இருக்கிறது காய்ச்சலின் வீரியம் குறைவாக உள்ளது .மற்ற மாநிலங்கள் பேசி கொண்டிருந்த போது நாம் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டோம்.
மேலும் படிக்க | கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு : ஆவணங்களை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
இந்த காய்ச்சலுக்கு கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது இதுவரை 6613 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது இதில் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் மக்கள் நல வாழ்வு என்றால் மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 இரண்டும் மக்கள் மனதில் பதிந்துள்ளது என தெரிவித்தார்.