தமிழ்நாடு

“இஸ்லாமியா்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவாா்கள்....” செஞ்சி மஸ்தான்!!!

Malaimurasu Seithigal TV

நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமியா்களை  விடுதலை செய்ய சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சா் செஞ்சி மஸ்தான் தொிவித்துள்ளாா்.

புனரமைப்பு பணிகள்:

சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரிய கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சட்டப்பேரவை அறிவிப்பின்படி தர்காக்கள் புணரமைப்பிற்காக வழங்கப்படும் மானிய தொகையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.  நூறாண்டு பழமையான பள்ளிவாசல் மற்றும் தர்காக்களை புனரமைத்திட தமிழக அரசு 6 கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாகூர் தர்காவிற்கு அந்த அறிவிப்பின் கீழ் முதல் தவணையாக ஒரு கோடியை 40 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் நாகூர் தர்க நிர்வாக அறங்காவலரிடம் அளித்தார்.

காசோலை:

பள்ளிவாசல்களை புணரமைக்க 6 கோடியாக இருந்த நிதியை இன்று 10 கோடியாக உயர்த்தி வழங்கி இருக்கிறார் முதலமைச்சர்.   அந்த வகையில் முதல் கட்டமாக நாகூர் தர்காவிற்கு இரண்டு கோடி ரூபாய் காண காசோலை வழங்கப்பட்டு இருக்கிறது.   இதற்காக துறை அமைச்சர் என்ற முறையில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.  

விடுதலை:

மேலும் நீண்ட நாட்கள் சிறைவாசிகளாக உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்வதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் உறுதி அளித்துள்ளார் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் நடந்து முடிந்த குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்துடன் போது இந்த மானியத்தை 10 கோடியாக முதலமைச்சர் உயர்த்தியதன் காரணமாக இந்த ஆண்டு கூடுதலாக வக்பு நிறுவனங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.