காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சுங்கச்சாவடி முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
சுங்கச்சாவடியை தாக்கி சேதபடுத்தும்படி போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை தூண்டியதாக, வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த ரத்து செய்யக் கோரி வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிக்க | பில்கிஸ் பானு வழக்கு - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி...!