தமிழ்நாடு

“திமுக குடும்பத்தை எதிர்த்து திரைத்துறையினர் கேள்வி கேட்க வேண்டும்” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Malaimurasu Seithigal TV

திரைத்துறையில்  திமுக குடும்பம் கோலோச்சுவதை  எதிர்த்து  திரைத்துறையினர் கேள்வி எழுப்ப வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், லியோ திரைப்பட விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு வழங்காததால் படம் வெளியாவதில் தொடர் நெருக்கடி அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் சில திரைப்படங்களை.  திரைப்படங்களை அடிமாட்டு விலைக்கு கேட்பதாகவும் அவர்  குற்றம்சாட்டினார்.

அதிமுக ஆட்சி காலத்தில் திரைத்துறை எவ்வித தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட்டதாக ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

முன்னதாக நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்  விஜய் அரசியலுக்கு  வருவதை தெரிந்து  திமுக அரசு  அவருக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக  குற்றம்சாட்டியுள்ளார். லியோ படத்துக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும்  நெருக்கடியை ஏன் ஜெயிலர் படத்துக்கு கொடுக்கவில்லை எனவும் அவர் வினவினார்.