பொதுத்துறை நிறுவன சொத்துக்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பதை கண்டித்து, தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செல்வபெருந்தகை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
7 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் மத்திய அரசு பொதுச்சொத்துக்களை விற்க முயற்சி செய்து வருவதாகவும், அதனை தமிழக முதலமைச்சர் தடுத்து நிறுத்தி சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அப்போது பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பொதுச்சொத்துக்களை தனியார் மயமாக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதி அளித்துள்ளார்.
இதனையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுத்துறை நிறுவனங்கள் நம் அனைவருடைய சொத்து என குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சிக்கும், சிறு-குறு தொழிலுக்கும் பொதுத்துறை நிறுவனங்களே ஆணிவேராக உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள அவர்,
பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடுவது தேச நலனுக்கு உகந்தது அல்ல என்றும், இதனை எதிர்க்கும் வகையில் பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் கூறியுள்ளார்.