திருப்பரங்குன்றம் வைகாசி விசாகத் திருவிழா கூட்டத்தில் சிக்கிய வங்கதேச நபர் - இந்திய வரைபடத்துடன் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.
வைகாசி விசாக திருநாளையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியதால் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கோவில் சுற்றுவட்டார பகுதியில் கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நபர் ஒருவர் சுற்றி திரிவதைக் கண்ட போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர்.
அப்போது அவர் வங்கதேசத்தை சேர்ந்த காலிமூசா என்பது தெரிய வந்தது. தொடர்ந்து., அவரிடம் இருந்த பையை சோதனையிட்ட போது இந்திய வரைபடத்துடன் கூடிய காகிதம் ஒன்றை வைத்திருந்ததை கண்டு போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் காலிமூசாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காலிமுசா கையில் இந்தியா வரைபடத்துடன் சுற்றித்திரிந்த சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் முறையான அனுமதி பெறாமல் கடல் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க | " தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடல்: கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளிலாவது செயல்படுத்துங்கள் " - அன்புமணி ராமதாஸ்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர் திருவிழா கூட்டத்திற்குள் எதற்காக நுழைந்தார்.? குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட முயன்றாரா.? இவருடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா.? திருப்பரங்குன்றம் பகுதிக்கு வர என்ன காரணம்.? என பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தின் நடுவில் இந்திய வரைபடத்துடன் வங்கதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.