தமிழ்நாடு

"சனாதானத்தை ஒழிக்க வந்ததுதான் திராவிட மாடல் ஆட்சி" - உதயநிதி ஸ்டாலின்.

Malaimurasu Seithigal TV

திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 2  ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 1222 இடங்களில் திமுக சார்பில் ஈடில்லா இரண்டாம் ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராயப்பேட்டை பகுதியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். 

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  ,

"முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வதாரம், பாதிப்படைந்த மக்களுக்கு 4,000 நிதியுதவி, புதுமை பெண் திட்டம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 மணி நேரம் போன்ற மக்கள் நல திட்டம். 60,000 மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் அரசு பள்ளியில் சேர இந்த கல்வியாண்டில் விண்ணப்பித்துள்ளனர்,  அறிவித்த இரண்டே ஆண்டில் மதுரை கலைஞர் பெயரிலான நூலகத்தை திறக்க உள்ளோம், எய்ம்ஸ் மருத்துவமனை போன்றல்ல, வெறும் செங்கல் மட்டும்  வைத்து நின்றுவிட வில்லை....

உயரிய, சிறப்பாக சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில், வரும் ஜூன் 3 ஆம் தேதி உயர்தர பன்னோக்கு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. இந்த தொகுதியின் மெரினா கடலில், அலையில் மாற்று திறனாளிகள் மகிழ்ந்து விளையாட சிறப்பு பாதை அமைத்து உள்ளோம், உலகிலே மாற்று திறனாளிகள் கடலில் அலை விளையாட செல்லும் சிறப்பு பாதை உள்ள 2 ஆவது கடற்கரை மெரினா தான்....

கொய்யதொப்பு பகுதியில் பயன்பாடற்ற குடியிருப்பை அகற்றி, புதிய குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது, இதன் விடில்ல பொதுமக்கள் புதிதாக வீடுகள் கிடைக்க உள்ளன. 2,25,000 பேர் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, 65,000 தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். 3.40 கோடி செலவில் முத்தையால் தெரு , நகர்ப்புற சுகாதார மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, 5,250 பேருக்கு குடும்ப அட்டை புதிதாக வழங்கப்பட்டுள்ளது.

"மழைக்காலங்களில் இந்த தொகுதியின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கும், ஆனால் தற்போது தொகுதியில் எங்கும் மழை நீர் தேங்காத வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினதார்.  இந்த தொகுதியில் 8 கோடி மதிப்பீட்டில் 2 சமூக நலக்கூடம் அமைய உள்ளது, மேலும் 1 நகர்புற சுகாதார நிலையம், 1 உடற்பயிற்சி மையம், 4 பேருந்து நிறுத்தம் போன்றவை விரைவில் அமைக்கப்பட உள்ளன". 

"ஐபிஎல் போட்டியில் விளையாட 10 அணி உள்ளது, அது போல அதிமுகவில் ஒபிஎஸ், இபிஎஸ், டிடிவி, சசிகலா என பல அணிகள் உள்ளது. நமது கட்சியின் கரை வேட்டி அணியும் நாம் திமுகவினர் என்பது பிறர் அறிவர்,  ஆனால் அதிமுகவினர் கரை வேட்டி அணிந்தால் அவர் எந்த அணி என்ற கேள்வி பிறரிடம் எழும் நிலையில் அதிமுகவினர் ஆக்கி விட்டனார். மருத்துவர் குறிப்பில் சாப்பாட்டிற்கு முன், பின் என்று இருக்கும், ஆனால் அதிமுக வரை பொறுத்த வரை அமித்ஷா முன், பின் தான் என்று கூறினார்.சனாதனத்தை ஆளுநர் கொண்டுவர பார்க்கிறார் ஆனால் உங்கள் சமாதானத்தை ஒழிப்பது தான் திராவிடம் மாடலின் ஆட்சி",  என்றார்...

முன்பெல்லாம், தமிழக மக்களின் குரல் டெல்லிக்கு கேட்காதா என ஏங்கி இருந்தனர். இப்போது தமிழகத்தில் இருந்து முதல்வர் மூலமாக வரும் குரலை எதிர்பார்த்து டெல்லி காத்திருக்கிறது" என்றார். 

அதானி என்ன தொழில் செய்கிறார் என ஆய்வு செய்தலில், அதானி ஒரு தொழிலும் செய்யவில்லை, மோடியோடு ஊர் சுற்றினார். கடந்த ஒன்பது ஆண்டில் எப்படி அதானி 12 லட்சம் கோடிக்கு அதிபதியானார் என கேள்வி எழுந்தது. இது குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார் அதற்காகத்தான் மோடி அரசு அவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் பெரும் வெற்றியின் மூலம் யாரை முதலமைச்சர் கையை காட்டுகிறாரோ அவர்தான் பிரதமர்",   என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.