கல்லூரி மாணவர்கள் மத்தியில் தமிழ் மரபு
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் "மாபெரும் தமிழ்க்கனவு" என்கிற பள்ளி கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு மற்றும் பண்பாண்டை பரப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது சிறப்பு விருந்தினராக இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் ஒடிசா மாநில தலைமை ஆலோசகர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சென்னையின் பல்வேறு கல்லூரி மாணவர்கள் மத்தியில் தமிழ் மரபு குறித்து உரையாற்றினர்.
அதன் பின்னர் மேடையில் பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழ்க் கனவு திட்டம்
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களில் நம்மை பெருமை படுத்துகிறது இந்த மாபெரும் தமிழ்க் கனவு திட்டம். மார்ச் இறுதி வரை இந்த பரப்புரை பயணம் நடைபெற இருக்கிறது.தமிழ்நாடு தமிழன் தான் தொண்மையானவன்...நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி என் வாழ்த்துக்கள் என கூறினார்.
ஆஸ்கார் விருதுக்கு விருது
ஆஸ்கார் விருதுக்கு விருது ஒன்று அளிக்கலாம் என்றால் அந்த விருதுக்கு தமிழ்நாடு என்ற பெயர் தான் பொருத்தமாக இருக்கும்.வாழ்கையில் ஒரு முறையாவது அனைவரும் கீழடி அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும்.
தமிழி என்கிற எழுத்துக்கள் எல்லாம் அன்றே எழுதபட்டுள்ளது. விவசாயம் என்பதில் நாம் யார் என்பதை எடுதது கட்டுவதற்கு கீழடி தான் சாட்சி.
பெண்களுக்கு விடுதலையை பெற்று தந்தது திராவிட மாடல் தான் என்பதை நான் பெருமையாக சொல்வேன்.51.4 சதவீதம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி பயின்று வருகிறார்கள்.கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது.மதிய உணவு திட்டம் ஒவ்வொரு முதலமைச்சரும் அடுத்த அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கட்டணமில்லா பேருந்து காலை உணவுத்திட்டம் முழு மன நிம்மதி
கட்டணமில்லா பேருந்து அறிவித்த பிறகு 50 சதவீதம் பெண்கள் தான் மன நிம்மதியுடன் இருந்திருப்பார்கள்...காலை உணவு திட்டத்தை அறிவித்த பிறகு தான் அவர்கள் முழு மன நிம்மதி அடைந்துள்ளார்கள்.
இன்று நீங்கள் இங்கு சுதந்திரமாக அமர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்றால் அது நமக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. அதற்காக நாம் அனைவரும் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்*.வரலாற்றை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சமூக அரசாணை - இட ஒதுக்கீடு
நீதி கட்சி காலத்தில் கொண்டவரப்பட்ட சமூக அரசாணை தான் இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு முக்கிய காரணம். ஒவ்வொரு கால கட்டத்திலும் கல்வி போராடி போராடி தான் பெறப்பட்டுள்ளது. நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல.திணிக்க படும் போது தான் அதை நாம் எதிர்க்கிறோம்.கல்லூரி மாணவர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு ஒருவர் ஒரு உயர்ந்த நிலையை அடைந்துள்ளார் என்றால் அது அவர்கள் நடத்திய போராட்டங்கள் மூலமாக தான்.
மேலும் படிக்க | ஆங்கிலேயர்கள் நமது கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் அழித்தார்கள் - ஆளுநர் மீண்டும் சர்ச்சைக்கு வழிவகுக்குமா
50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை,அதிர்ச்சி தரும் தகவல் அதிர்ச்சி தரும் தகவல் இன்று என்று சொல்லும் போது,முதலில் எங்களை கிண்டல் செய்வார்கள் பின் என்ன தான் செய்கிறார்கள் பார்க்கலாம் என்று இருப்பார்கள் அதன் பிறகு தேர்ச்சி விகிதம் வரும்பொழுது எங்களை பாராட்டுவார்கள் அந்தப் பாராட்டுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம் அதை நோக்கி செல்கின்றோம். மாணவர்கள் யாரையும் கைவிட்டு விடாத வண்ணம் அனைவரையும் கல்விக்குள் கொண்டுவர முடியும்.சமுதாயத்தில் இருக்கும் வியாதிகளுகெல்லாம் கல்வி ஒன்று தான் மருந்து காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு திட்டத்தினால் தமிழ்நாட்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என எனக்கல்லூரி மாணவர்களிடம் அரட்டையோடு அரசியலையும் பேசினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.