தமிழ்நாடு

விவசாயிகளை வஞ்சித்துவிட்டது தி.மு.க. அரசு... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

தி.மு.க. அரசு விவசாயிகளை வஞ்சித்து விட்டதாகவும், அ.தி.மு.க. அரசு வழங்கிய விவசாய கடனை தர மறுப்பதாகவும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று உள்ளாட்சி  தேர்தல் தொடர்பான அதிமுக  ஆலோசனை கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. 

ராணிப்பேட்டை அதிமுக மாவட்டச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் துணை கொறடாவுமான சு.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி கலந்துகொண்டு கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தின் போது பேசிய தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசு பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை கூறி தமிழகத்தில் ஆட்சி கொள்ளை புற வழியாக கைப்பற்றி உள்ளதாகவும் தி முக அரசு விவசாயிகளை வஞ்சித்து விட்டது.

அதிமுக அரசு வழங்கிய விவசாய கடனை தர மறுக்கிறது அவர்களால் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவம் நடந்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர். 
ஒற்றுமையுடன் கடுமையாக உழைத்தி  அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற வேண்டும் என தெரிவித்தார். இந்த ஆலோசணை கூட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் பலர் கலந்து கொண்டனர்.