தமிழ்நாடு

”பெயர் தெரியாத சங்கங்கள் நடத்தும் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்ளக் கூடாது” நாஞ்சில் ரவி கோரிக்கை!

Tamil Selvi Selvakumar

பெயர் தெரியாத சங்கங்கள் நடத்தும் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளக் கூடாது என அனைத்து மீனவர் சங்கத் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மீனவ இயக்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு முதலமைச்சர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் மீன்பிடிக்க உள்ளூர் மீனவர்களுக்கு உரிமை வழங்கிட வேண்டும், கடலையும், கடற்கரையும் சுற்றுலாத்தலமாக மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அனைத்து மீனவர் சங்கத் தலைவர் நாஞ்சில் ரவி, இரண்டரை ஆண்டு ஆட்சி காலத்தில் திமுக மீனவர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை, ஒரு மீனவர் கூட அமைச்சரவையில் இடம் பெறவும் இல்லை, மீனவர்களுக்கு குரல் கொடுக்காமல், உடன் இருக்காமல், பெயரே தெரியாத மீனவர் சங்கங்கள் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள முதலமைச்சர் சென்றிருப்பது கண்டனத்திற்குரியது என்று கூறியவர், இந்த மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரிக்கை வைத்தார்.